Category: பிரதான செய்தி

அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்

அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல் அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கியுள்ள குறித்த விலைப்பட்டியலை அரசாங்க…

எரி பொருட்களின் விலைகள் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைந்துள்ளது. இதன்படி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அதேநேரம்,…

அநுரகுமார தலைமையிலான அரசுக்கு ஜப்பான் முழு ஒத்துழைப்பு : நிறுத்தப்பட்டிருந்த திட்டங்களும் உடன் ஆரம்பமாகும் – ஜப்பான் தூதுவர்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார்.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே…

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதை தவிருங்கள் -பிரதமர் ஹரிணி

அரசியல்வாதிகளை தமது பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து பாடசாலைகளையும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், அரசியல்வாதிகளை பாடசாலைகளுக்கு அழைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வியில்…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை! இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன். எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து…

குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளரை தடுத்து வைக்க உத்தரவு!

இன்று மாலை நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் வரை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, நீதிமன்ற வளாக சிறையில் தடுத்து வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, இன்று (25.09.2024) காலையில், நீதிமன்றத்தை அவமதித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல்…

ஒன்பது மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று நியமிக்கப்படலாம்!

புதிய அரசாங்கத்தின் 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று (25) நியமிக்கப்படவுள்ளனர். இந்த நியமனங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் கலைப்பு!

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்தமானி வெளியானது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவிப்பு (24) நள்ளிரவு அச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இது தொடர்பான…

பிரதமராக ஹரனி அமரசூரிய பதவியேற்றார்!

பிரதமராக ஹரனி அமரசூரிய பதவியேற்றார்! இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரனி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்று முன்னர் பதவியேற்றார். நீதி, கல்வி, தொழில் , கைத்தொழில் , விஞ்ஞான & தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் அமைச்சுகளும்…

நாடாளுமன்றம் இன்றுடன் கலைக்கப்படலாம்?

புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தோடு, அமைச்சரவை நியமனத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.