மகிழூர்முனை சாம் தில்லையாவின் ”சொர்க்கத்து அகதிகள்” நூல் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது!

கனடாவில் வசிக்கும் மகிழூர்முனையைச் சேர்ந்த சட்டத்தரணி சாம் தில்லையாவின் ”சொர்க்கத்து அகதிகள்” நூல் மட்டக்களப்பில் கடந்த 10 ஆம் திகதி மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தால் வெளியீட்டு வைக்கப்ட்டது. மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சைவப்புலவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

”வியத்தகு எழுத்தாளர் சாம் தில்லையா”
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற சட்டத்தரணி சாம் தில்லையா அவர்களின் சொர்க்கத்து அகதிகள் இதுவரைப் பேசாத பல தளங்களைப் பேசுகின்றன
சட்டத்தரணி சாம் தில்லையா…
மகிழூர்முனையினைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், கனடாவில் வசித்து வருகின்றார்.
யாழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை நிறைவு செய்த அவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டமாணிக் கற்கையினையும் சட்டக் கல்லூரியில் ATTONEY AT LAW யும் நிறைவு செய்தார்.
தொடர்ந்து சட்டவாளராகப் பணியாற்றிய அவர், 1993ஆம் ஆண்டு கனடாவில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் ”நூறாண்டுக் குற்றவியல் சட்டம்” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்தார்.
இது ”மக்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களால் குற்றத்தைத் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது” எனும் பொருண்மையில் அமைந்திருந்தது.
இவ்வாறாக 36 வருடங்களுக்கு முன்னர் நிலத்தில் இருந்து புலத்திற்குச் சென்ற ”சாம்” இம்மாதம் 23ஆம் திகதி பாரியாருடன் இலங்கை திரும்பினார்.
அவ்வகையிலே அவருடன் நீண்டகாலமாகத் தமிழியற்புலத்தின்வழி கொண்ட தொடர்பின் காரணமாகச் ”சொர்க்கத்து அகதிகள் எனும் நூலை இம் மண்ணில் வெளியிடச் சித்தம் கிடைத்தது.
இவரது நூல்கள் (எண்ணப்படி மலர்ச்சி, மறுமை, சொர்க்கத்து அகதிகள்) வாழ்வில் காணப்படுகின்ற பல்வேறு சிக்கல்களுக்கான பதிலை முன்வைக்கின்றது. விஞ்ஞானம் சொல்லாத பல வியத்தகு செய்தியை இப்புத்தகம் / புத்தகங்கள் சொல்கின்றது. (ன)
இத்தகைய பெரிதிலும் பெரிதான சட்டத்தரணி சாம் தில்லையா அவர்களை இம் மண்ணுக்கு அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டில் வெளியிட இருந்த இப்புத்தகத்தினை சொந்த மண்ணில் வெளியிடச் செய்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இப்புத்தகத்தினை வெளியிட உறுதுணையாக இருந்த எமது மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்திற்கு நன்றியும் வாழ்த்தும்