சங்கு சின்ன வேட்பாளர் புஸ்பராசாவுக்கு மாவட்டம்தோறும் பேராதரவு: நேற்று பாண்டிருப்பிலும், விநாயகபுரத்திலும் பரப்புரை கூட்டங்கள்!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக சங்கு சின்னத்தில் இலக்கம் 10 போட்டியிடும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான சோ.புஸ்பராசாவுக்கு அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் ஆதரவு வலுவடைந்து வருகிறது.
இவர் பங்குபற்றும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பெருமளவான பொது மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்துவருகின்றனர்.
நேற்றைய தினம் திருக்கோவில் பால் பண்ணையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டிலும் ,பாண்டிருப்பில் புத்திஜீவிகளின் ஏற்பாட்டிலும் ஆதரவுக் கூட்டங்கள் இடம் பெற்றன.
இன்றைய தினம் அக்கரைப்பற்றிலும் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புஸ்பராசா எனும் பொருத்தமான ஒரு வேட்பாளருக்காக நாங்கள் சங்குக்கு எமது ஆதரவை வழங்கி வருகின்றோம் என மக்கள் கருத்து தெரிவித்தனர்.