இராமகிருஷ்ணா கல்லூரியில், பெண் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி தரிப்பிட திறப்பு விழா.
(கலைஞர்.ஏ.ஓ.அனல்)
கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 1998 சாதாரண தரம் மற்றும் 2001 உயர்தரத்தில் கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களினால், பெண் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி தரிப்பிடமானது பாடசாலையின் அதிபர். J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் இன்று (08) இடம் பெற்றிருந்தது.
திருக்கோவில் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சோ.சுரனுதன் மற்றும் உதவி
திட்டமிடல் பணிப்பாளர் A.M.நெளபர்டீன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடி வேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளரும்,கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான கே.கமலமோகனதாசன், அவர்களும் பிரதி அதிபர்களான சி. மதியழகன், கே.மகேஸ்வரன் ஆகியோரும், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் P.அகிலன், பழைய மாணவர் சங்க உறுப்பினர் வி.சுகிர்தகுமார் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள்,1998 கா. பொ. த. சாதாரண தரம் மற்றும் 2001 உயர்தர மாணவ உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.