அம்பாறைக்கு ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும் என்றால் தமிழரசு கட்சிக்கு மட்டும் தான் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தில் இலக்கம் இரண்டில் (2) போட்டியிடும் கந்தசாமி இந்துனேஷ் தெரிவித்தார் .
திருக்கோவில் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் .கடந்த முறை போன்று இம்முறையும் அம்பாறை தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு பல கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் களமிறங்கியுள்ளன இவர்களால் ஒரு போதும் அதிக வாக்குகளை பெற்று ஒரு ஆசனம் பெற முடியாது இது அவர்களுக்கும் தெரியும் ஆனால் அவர்களின் நோக்கம் வாக்குகளை சிதறடித்து அம்பாறைக்கு ஆசனம் இல்லமால் செய்வதே ஆகும் . இதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் . உங்கள் பெறுமதியான வாக்குகளை வீணடிக்க வேண்டாம் .
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கடந்த முறை விட்ட தவறை இம் முறை செய்யமாட்டார்கள் . தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என மிகத் தெளிவாக இருக்கிறார்கள் இன்னமும் தெளிவுபடுத்தல்களை நாங்கள் எதிர்வரும் நாட்களில் வழங்க இருக்கின்றோம்.
இம் முறை அரசாங்கம் அமைப்பதற்கு எமது கட்சியின் ஆதரவு தேவைப்படலாம் அப்படியான சந்தர்ப்பத்தில் கட்சியிலிருந்து அதிகமான ஒரு அணியாக செல்வதனால் தான் நாம் ஒரு பலம் மிக்க சக்தியாக இருப்போம் . வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரதிநிதிகள் தமிழரசு கட்சியினர் மட்டும் தான் என தென்னிலங்கைக்கு உணர்த்த வேண்டும் .
நில அபகரிப்புகள் இடம் பெறக் கூடாது இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்கள் இடம் பெற வேண்டும் என்றால் இலங்கை தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரம் தான் செய்ய முடியும்.