சங்கு சின்ன வேட்பாளர் சோ.புஸ்பராசாவின் தேர்தல் பரப்புரை கூட்டங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் சார்பாக சங்கு சின்னத்தில் 10 இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சோமசுந்தரம் புஸ்பராசா தனது தேத்தல் பரப்புரைக் கூட்டங்களை அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுத்து வருகின்றார்.
பல இடங்களிலும் பொதுமக்கள் தமது வரவேற்பினை வழங்குவதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் சக வேட்பாளர்களும், பல அரசியல் பிரமுகர்களும் தமது ஆதரவினை வேட்பாளர் புஸ்பராசாவுக்கு வழங்கிவருகின்றனர்.






