மட்டக்களப்பு கடல் பகுதியின் களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, குருக்கள்மடம், ஒந்தாச்சிமடம் உள்ளிட்ட கடற்கரையோரங்களில் நேற்று முன்தினம் (29.10.2024) மாலையிலிருந்து நாவல் – கறுப்பு நிறம் சார்ந்த ஒரு வகை மீன்கள் பல்லாயிரக் கணக்கில் கரையொதுங்கியுள்ளன.
இந்த மீன் இனம் பற்றி உறுதியாக எதுவும் தெரியாததால் இதனை சாப்பிட வேண்டாம் என அங்கிருக்கும் மீனவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.