வீட்டுச் சின்னத்தை வீணடிப்பதற்கு வேற்றுச் சின்னமா?
ஒருபோதும் முடியாது! வீடே வெல்லும்!!
வீரச்சோலையில் வேட்பாளர் ஜெயசிறில் சூளுரை
( வி.ரி.சகாதேவராஜா)
Hide quoted text
வீட்டுச்சின்னத்தை வீணடிப்பதற்கு பல வேற்றுச் சின்னங்கள் தலைப்பட்டிருக்கின்றன. எத்தனை சின்னங்கள் வந்தாலும் வீடே வெல்லும்.
இவ்வாறு நாவிதன்வெளி வீரச்சோலை மக்கள் அளித்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சூளுரைத்தார்.
வீரச்சோலை ஆலய முன்னாள் தலைவர் முருகேசபிள்ளை சோமசுந்தரம் தலைமையில் நேற்று (30) புதன்கிழமை ஆலய குருக்களின் முன்னிலையில் இவ் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் அங்கு அவர் உரையாற்றிய போது.
எமக்காக நான், எனக்காக நான் இல்லை. இனத்துக்காகவே செயல்படுகின்றேன் ,எனது வெற்றி உங்களது வெற்றி. அம்பாறை மாவட்டம் மறுமலர்ச்சி பெற வாக்களியுங்கள் . உங்களைப் பாதுகாப்பது உங்களுடைய வாக்குப்பலமே. எங்களுடைய ஆயுதம் உங்களுடைய வாக்கு. கூடிய வாக்குகள் கிடைக்கப் பெறுகின்ற போது அம்பாரை மாவட்டத்திற்கு சவாலாகதிகழ்கின்ற விடயங்களை சவாலாக எதிர்கொண்டு அனைத்து விடயங்களிலும் வெல்ல முடியும்.
வீரச்சோலை போன்ற பின்தங்கிய பிரதேசங்களை எழுச்சி பாதைக்கு கொண்டுவர முடியும் .அவ்விருத்தியுடன் கூடிய உரிமையையும் பெற்று தருவேன் என்றார்.
ஆலய முன்னாள் தலைவர் முருகேசபிள்ளை சோமசுந்தரம் பேசுகையில்..
இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய வெற்றி வேட்பாளர் ஜெயசிறிலை ஆதரித்து இங்கு ஆலயத்தில் நடைபெறும் கலந்துரையாடல் நிச்சயமாக அவர் வெற்றி பெறுவார் என்பதை கட்டியம் கூறுகிறது.
அம்பாறை மாவட்டத்திற்கு காவலனாக வர இருக்கின்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறக்கூடிய எமது ஏழைகளின் தோழன் அம்பாறை மாவட்ட மண்ணின் மைந்தன் ஜெயசிறில் அவர்களை நாங்கள் பெருமளவான வாக்குகளைச் செலுத்தி வெல்ல வைப்போம் . வீரச்சோலைக்கு அவர் தேர்தலைப் பிரச்சாரத்திற்கு மாத்திரம் வருபவர் அல்ல . ஏனைய ஆன்மீக சமூகப் பணிக்கும் கல்விக்கும் பல உதவிகளை கடந்த காலங்களில் செய்தவர். கொரோனா காலகட்டத்தில் உதவிய ஒரே மனிதர் இவர் தான்.
அவருக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். அதற்காக நாங்கள் எங்களது கிராமம் முற்று முழுதாக ஒத்துழைத்து அவரை வெற்றி வாகை சூடுவதற்கு செயல்படுவோம்.என்றார்.
மேலும் மக்களுக்கு தனது ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் கூறி இருந்தார்.
ஆதரவாளர்கள் பொதுமக்கள் நலம்பிரும்பிகள் என பலரும் கலந்து கொண்டார்கள் .


