சங்கு சின்னத்தில் வேட்பாளர் புஸ்பராசாவின் கல்முனை அலுவலகம் திறந்து வைப்பு!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் சங்கு சின்னத்தில் 10 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சோ. புஸ்பராஜாவின் தேர்தல் காரியாலயம் இன்று 29.10.2024 கல்முனையில் திறந்து வைக்கப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளான ஈ. பி. ஆர் எல். எப் அம்பாறை முக்கியஸ்த்தர் புண்ணியநாதன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வின் சக வேட்பாளரான கி. லிங்கேஸ்வரன் மற்றும் புளட் அமைப்பிம் அப்பாறை மாவட்ட முக்கியஸ்தர் சங்கரி, ஈரோஸ் ஜனநாயக முன்ணனியின் தலைவர் இராஜ இராஜேந்திரன் உட்பட பெருமளவான ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.




















