தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் நற்பிட்டிமுனையில் கட்சி காரியாலயம் திறப்பு
பாறுக் ஷிஹான்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷின் உத்தியோகபூர்வ கட்சிக் காரியாலம் சனிக்கிழமை (26) மாலை திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கட்சி அலுவலகம் நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் வைத்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷினால் திறந்து வைக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பொதுமக்களுடனான சந்திப்பும் இடம் பெற்றது.
இதன் போது வீட்டு சின்னத்தில் இலக்கம் 2 இல் போட்டியிடும் தனக்கு ஆதரவு வழங்குமாறும்இ வாக்குகளை சிதறடிக்க வேண்டாம் என கூறியதுடன் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் ஒருமித்து வாக்களிக்காவிட்டால் அரசியல் அநாதைகளாக்கப்படுவர். தற்போதைய பாராளுமன்ற தேர்தலின் முக்கியத்துவம் வாக்களிப்பதன் ஊடாக தமிழ் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது கடந்த கால தேர்தல் தவறுகள் பருவ கால தேர்தல் வியாபாரிகளின் செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்கள் உட்பட அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அங்கு பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







