அறுகம்பை சுற்றுலா பிரதேசத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது -அமெரிக்க தூதரகம்
அறுகம்பை சுற்றுலாப் பகுதிக்குச் செல்லும் ரஷ்ய பிரஜைகள் அவதானமாக இருக்குமாறு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதனை தவிர்க்குமாறும் தம் நாட்டு பிரஜைகளிடம் ரஷ்ய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அறுகம்பை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் கிடைத்துள்ளதால் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவும் இது குறித்து தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள் நிலையில் தற்போது ரஷ்யாவும் தமது பிரஜைகளை எச்சரித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு, அறுகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவலை மேற்கோள் காட்டி, மறு அறிவிப்பு வரும் வரை அறுகம்பை பகுதிக்குச் செல்வதை தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே ரஷ்ய தூதரகமும் தமது பிரஜைகளை எச்சரித்துள்ளது.
