ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வெற்றிக்காக விசேட பூசை வழிபாடு கல்முனை புலவி பிள்ளையார் ஆலயத்தில் வெஸ்லியன் 78 – 82 சமூக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
கல்முனை வெஸ்லியன் 78 – 82 சமூக அமைப்பின் செயலாளர் எஸ். நாகேந்திரன்J.P அவர்களின் ஏற்பாட்டில் இப் பூசை நிகழ்வு இடம்பெற்றது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அம்பாறை மாவட்டத்திலேயே போட்டியிடுகின்ற வேட்பாளர் சோ. புஷ்பராசா கி. லிங்கேஸ்வரன .துரைசிங்கம் ஆகியோரும் கல்முனையின் புத்திஜீவிகள் வெஸ்லியன் 78 – 82 சமூக அமைப்பின் உறுப்பினர்கள், உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பூசை வழிபாடுகளை தொடர்ந்து கல்முனை பிரதான வீதிகளில் உள்ள வியாபார ஸ்தலங்களுக்கு தேர்தல் பரப்புரையினையும் இவர்கள் மேற்கொண்டு இருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பல்வேறு கிராமங்களிலிருந்து மக்கள் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
.













