உலக சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக பெரிய நிலாவணை சீயோன் தேவாலயம், NEXT STEP சமூக அமைப்பின் அனுசரணையோடு சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள் நேற்றைய தினம் சிறப்பாக இடம் பெற்றது.
பெரியநீலாவணை சிறுவர் பூங்காவில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கா. சாந்தகுமார் (ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரிய ஆலோசகர்) அவர்களும் சிறப்பு அதிதிகளாக சோ. குபேரன் (முன்னாள் மாநகர சபை உறுப்பினர்)
பொ. ஜெகநாதன் (ஒய்வு நிலை கோட்டக்கல்வி அகாரி) திருமதி விஜயலட்சுமி நவரத்தினம்(ஒய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர்) NEXT STEP சமூக அமைப்பின் தலைவர் N. சௌவிய தாசன். பெரிய நிலாவனை போலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ் .ஐ நஜிம். சீயோன் தேவாலயம் தாளங்குடா போதகர் ஜீவராஜ். கிராமகல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஸ்தாபகர் பு. கேதீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகள் யாவற்றையும் தலைமை தாங்கி நடத்தியவர் பெரிய நீலாவனை சீயோன் தேவாலய போதகர்
புஸ்பராணி அவர்கள். நிகழ்ச்சி தொகுப்பாளராக வி. கார்த்திக் கிராமசேவகரும் NEXT STEP சமூக அமைப்பின் செயலாளர் அவர்களும், பணி செய்தார்.
பல்வேறு விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளிளும் கலாச்சார நிகழ்ச்சிகளும் அதிதிகளின் உரைகளும், பரிசளிப்பு என பல்வேறு விடயங்களோடு சிறுவர் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
































