சங்கு சின்னத்தில் போட்டியிடும் சோ. புஸ்பராஜாவை ஆதரித்து இடம் பெற்ற கூட்டம்!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னம் 10 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சோ. புஸ்பராசா அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் அவரது சொந்த கிராமமான 11 ஆம் கிராமத்தில் நேற்று இடம் பெற்றது.
ஓய்வுநிலை அதிபர் சாமித்தம்பி .சிதம்பரப்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் ஊர் பொது மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


