சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (17) அக்கரைப்பற்றில் கூட்டம் இடம் பெற்றது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மாவட்ட செயலாளர் வசந்தன் தலைமையில் ஆலையடிவேம்பு வை. எம். சி. ஏ.மண்டபத்தில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் , வேட்பாளர்களான சோ.புஸ்பராசா, சுப்ரமணியம் தவமணி, பாலசுந்தரம் பரமேஸ்வரன் ஆகியோரும் , ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவர் இராஜ இராஜேந்திரன் , முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் செல்வராசா ,ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர்கள் சங்க தலைவர் ,உறுப்பினர்கள் உட்பட பெருமளவான பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
















