பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் என்ற பெயருடைய ஆலயத்துக்கு சொந்தமான முகநூல் விஷமிகளால் ஊடுருவல் செய்யப்பட்டது தொடர்பான அறிக்கை.

  மேற்படி பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் என்று பெயரிடப்பட்ட எமது உத்தியோகபூர்வமான முகப்புத்தகமானது இன்று 16.10.2024 பி.ப 2.51 ற்கு விஷமிகளால் ஊடுருவப்பட்டு பெயர் மற்றும் அதில் ஏற்கனவே பதிவிடப்பட்ட சில பதிவுகள் மாற்றப்பட்டுள்ளதுடன் புதிதாக சில பதிவுகள் இடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எனவே இது தொடர்பாக ஆலய பரிபாலன சபை மேலதிக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. 

இந்த ஊடுருவலுக்கும் ஆலயத்துடன் தொடர்புடைய பரிபாலசபை, இந்து இளைஞர் மன்றம், இந்து மகளிர் மன்றம், மற்றும் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வனவாச பூசைமுகாமைக்கும்  எந்தவித தொடர்பும் இல்லை என்பதை இந்த அறிக்கை மூலம் அறிய தருகின்றோம். 

எனவே இது தொடர்பாக முகநூல் வாசிகள் அவதானமாக செயல்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.