கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு
கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் நடாத்தப்படும் அற்கின்ஸ் சிறுவர் மேம்பாட்டுத்திட்டத்தின் சிறுவர் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என்.ரமேஷ் இசரஸ்வதி வித்தியாலய அதிபர் திருமதி இராமநாதன்இ பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் திருமதி விஜிதாஇ மற்றும் திருச்சபையின் ஊழியர்களும் பிள்ளைகளின் பெற்றோரும் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.
கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் சேகர முகாமைக்குரு அருட் திரு ரவி முருகுப் பிள்ளை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறுவர்களின் நடனங்கள் பாடல்கள் இடம் பெற்றன.சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.












