சமூகத் தொண்டில் 20 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் சீடாஸ் – கனடா!

கனடாவை தளமாகக் கொண்டு இயங்கும் ”கிழக்கிலங்கை குழந்தைகள் மேம்பாட்டுச் சங்கம் – Children Development Association of Eastern Sri Lanka (சீடாஸ் – கனடா) எனும் அமைப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பரவலாக சுமார் இரண்டு தசாப்தங்களாக சமூகப்பபணிகளை செய்து வருகிறது.

சீடாஸ் அமைப்பின் 19 ஆவது வருட பூர்த்தி நிகழ்வு கடந்த 12.10.2024 அன்று கனடாவில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.


இதன் தலைவரான கல்முனையைச் சேர்ந்த நோ.விஜயரெட்ணம் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் ,கலை நிகழ்ச்சிகள் ,பேச்சுக்கள், போட்டிகள், பரிசளிப்புக்கள், சேவைக்கான கௌரவிப்புக்கள் என மிகவும் நேர்த்தியான திட்டமிடலுடன் இடம் பெற்றது. இந்நிகழ்வில் விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு சமூக சேவைக்கான விருதும்
நிதி உதவி விருது.
1,திருமதி.சோதிமலர் முத்துலிங்கம்.
2,வைத்தியர்திருமதி.அன்னபூரணி.ஆகியோருக்கும் வழங்கப்பட்டன இந் நிகழ்வுக்கு செயலாளராக. சசீந்திரன் வீரசிங்கம்.
பொருளாராக, ஜீவா மாணிக்கம் ஆகியோரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும் .

இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக சட்ட ஆலோசகர் நமோ .பொன்னம்பலம் மற்றும் சீடாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் குடும்ப சகிதம் கலந்து சிறப்பித்திருந்தனர்.


சீடாஸ் அமைப்பு 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரவலம் நாட்டில் இடம் பெற்ற போது அதன் பாதிப்புக்குள்ளான சிறுவர்களது சுகாதார ஆரோக்கியம், கல்வி வளர்ச்சியை முக்கிய பணியாகக் கொண்டு மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களில் தனது அவசர பணியை ஆரம்பித்திருந்தது. தொடர்ச்சியாக போர்க்கால சூழலினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள சிறுவர்களையும் கவனத்தில் எடுத்து சேவையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.


இவர்களின் சமூகப்பணிகள் மாணவர்களின் நலன் கருதியதாக, வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் செய்திருந்தாலும், மாணவர்களின் கல்வியை விருத்தி செய்தலை பிரதான நோக்காகக் கொண்டு , நேரடியான கல்வி முன்னேற்ற செயற்பாடுகளை பரவலாக செய்து வருகின்றனர்.


பொத்துவில் ,வாகரை ,பொலனறுவை ஆகிய பிரதேசங்களிலும் பல் வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தனர். பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவை அறிந்து துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளனர்.


இலுப்படிச்சேனை, மண்டூர் பிரதேசத்தில் தரம் 10 தொடக்கம் உயர்தரம் வரையான மாணவர்களுக்கான இலவசக் கல்வியையும், மாணவர் கல்வி முன்னேற்ற செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர் இதன் மூலம் சிறந்த பெறுபேறுகளையும் அடைந்துள்ளனர்.


வீரமுனை, ராணமடு, திருக்கோவில் பிரதேசங்களில் இந்த கல்வி முன்னேற்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாகவும் சீடாஸ் அமைப்பின் தலைவர் நோ.விஜயnரெட்ணம் கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.