இன்று கல்முனையில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளரர்களுக்கு வரவேற்பு!
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு கல்முனையில் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது .
கல்முனை மெழுகுவர்த்தி சந்தியிலிருந்து அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் வரை வேட்பாளர்கள் மாலை சூட்டி பட்டாசு வெடிச் சத்தங்களின் மத்தியில் இன்று வியாழக்கிழமை பகல் 1.20 மணியளவில் பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூடவே கல்முனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை ஒன்றும் நடத்தப்பட்டடது.
கல்முனை வேட்பாளர் சட்டமாணி அருள்.நிதான்சன் சார்பான கல்முனை தமிழ் இளைஞர்கள் இந்த வரவேற்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையிலான 10 வேட்பாளர்களுக்கும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.






