குருக்கள்மடம் விபுலாநந்தர் (ADVRO) இல்லத்தில் இடம் பெற்ற முதியோர் தின நிகழ்வு!
விபுலாநந்தர் முதியோர் நலம்புரி அமைப்பினால் (ADVR) செயற்படுத்தி வரும் குருக்கள்மடம் முதியோர் இல்லத்தில் முதியோர் தின நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.
முதியோர் இல்லத்தின் தலைவர் தே.சர்வானந்தாவின் தலைமையில் ADVRO தலைவர் கா. சந்திரலிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக இடம் பெற்றது.
இதில் முதியோர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் விளையாட்டுகள்,பாடல்கள் இடம் பெற்றன.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம். அலியார், மன்முனை தென் எரிவில் பற்று பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவு எ.பத்மினி ,வேதநாயகி ரெட்ணராஜா அ.திருவருள் ,முதியோர் இல்ல தலைவர் தே.சர்வானந்தா, பொருளாளர் எஸ்.அருளானந்தம், நிருவாக சபை உறுப்பினர் த.பூவேந்திரன், பாடகர் கரேல் சந்திரா, கலை இளவரசன் ச.நிதீசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.















