துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு – அனுசரணை உதவும் பொற்கரங்கள்
கல்முனை துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு இன்று (08) இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் ஆர். செந்தில் தலைமையில் நடை பெற்றது. இந் நிகழ்வுக்கு அதிதிகளாக எம்.எம்.ஹாபில் (EPSI -CO) , இதன் அனுசரணையாளர் சார்பாக திருமதி ஜெயந்தி கனகசூரியம் , ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய தலைவர் எஸ்.உதயகுமார் ,கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.சுந்ததரராஜன் ,எஸ்.குமுதராஜ் (EDO) V.இராஜேஸ்வரன் ( சமூர்த்தி உத்தியோகத்தர்) பி.சதிஸ்குமார் ( கிராம அபிவிருத்தி சங்கம்) உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.
இதற்கான பூரண நிதிப் பங்களிப்பை கனடாவில் வசிக்கும் சமூக சேவகர் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை வழங்கியிருந்தார். பல தேவைகள் உடைய இப்பாடசாலைக்கு இவர் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.









