பேருந்தில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும், மிகுதிப் பணத்தையும் வழங்காத நடத்துனர்கள் தொடர்பில் பயணிகள் முறைப்பாடு செய்ய முடியுமெனத் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

1955 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இதுதொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியுமெனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.