முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 பேரின் நிலையான வைப்புக்கள் உள்ளிட்ட சில சொத்துக்களை தொடர்ந்தும் 3 மாதங்களுக்கு முடக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரின் வங்கிக்கணக்குகள் ஆயுள் காப்புறுதிகளை இடைநிறுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் 16 வங்கிக்கணக்குகள் உட்பட 5 ஆயுள் காப்புறுதிகளை இன்றுவரை இடைநிறுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை 16 வங்கிக்கணக்குகள் உட்பட 5 ஆயுள் காப்புறுதிகளை இன்றுவரை இடைநிறுத்தி உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.