பொதுத் தேர்தல் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் – நேற்று முன்தினம் பாண்டிருப்பில் இடம் பெற்ற கலந்துரையாடல்!

பொதுத்  தேர்hதல் அறிவிக்கப்பட்டதில் இருந்து போட்டியிட பல தமிழ் கட்சிகள் தயாராகியுள்ள நிலையில் அவைகள் ஓரணியில் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கை அம்பாறை மாவட்டத்தில் வலுவடைந்து வருகின்றது.

இந் நிலையில் பொதுத் தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்டதிதின் பல பிரதேசங்களிலும் கலந்துரையாடல்களும் ஊடக சந்திப்ர்புக்களும் இடம் பெற்று வருகின்றன.


நேற்று முன் தினமும் பாண்டிருப்பில் உள்ள பொதுத் தேவைக் கட்டிடத்தில்  கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. தமிழரசுக் கட்சியின் கல்முனை தொகுதி தலைவர் நிதான்சனின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில்  கல்முனை பிரதேச இளைஞர்கள் ஆலய நிருவாகத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் கட்சிகள் பிரிந்து கேட்பதால் உள்ள பாதிப்புக்கள் தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள்  இடம் பெற்றன .

ஏதிர்வரும் தேர்தலில்  தமிழரசுக்கட்சி சார்பாக தான் போட்டியிடவுள்ள தகவலையும் நிதான்சன் தெரியப்படுத்தினார்.
எல்லோரும் ஓரணியில் போட்டியிடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டன.

கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வராத பட்சத்தில் தமிழ் அரசுக் கட்சி சின்னத்தில் தான் தேர்தல் கேட்க வேண்டி வரும் என நிதான்சன் குறிப்பிட்டார்