இமயத்தின் கற்றல் மேம்பாட்டு செயற்திட்டத்தின் அடுத்த கட்டமாக தேவையுடைய மாணவி ஒருவருக்கான கற்றல் நடவடிக்கைகளுக்கான துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் 29/09/2014 (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் பனங்காடு, அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவிக்கே குறித்த துவிச்சக்கரவண்டி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தாயை இழந்து, மனநலம் பாதிக்கப்பட்டு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தந்தை மற்றும் தரம் 10 இல் கல்வி கற்கும் சகோதரனுடன் பெரியம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் உயர்தரத்தில் கல்வி கற்றும் தேவையுடைய மாணவிக்கே குறித்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

பிரித்தானியாவின் ஹரோ பகுதியில் வசித்துவரும் இமயம் அமைப்பின் நலன்விரும்பி, சமூக செயற்பாட்டாளர் திரு சண்முகநாதன் சுபாஷ்ரகு அவர்களின் நிதிப்பங்களிப்பிலேயே குறித்த தேவையறிந்த செயற்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இமயம் அமைப்பின் உருவாக்கம் முதல் தொடர்ச்சியாக தன்னாலான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கிவரும் திரு சண்முகநாதன் சுபாஷ்ரகு அவர்களுக்கு மனநிறைவான நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இமயம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக தேவையறிந்த செயற்திட்டங்களை நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடனும், பங்களிப்புடனும் தாயகத்தில் தன்னார்வலர்களினூடாக இனங்கண்டு மேற்கொண்டு வரும் ‘இமயம்’ அமைப்பானது எதிர்வரும் 28/12/2024 தாயக செயற்பாடுகளுக்கான நிதி திரட்டலுக்காக VELVET NIGHT – 2024 இராவிருந்து கொண்டாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.