ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதாக தகவல்!
முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மட்டும் இலங்கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் படுதோல்வி அடைந்திருந்தார். தமது சொந்த தொகுதிகளிலேயே மக்களால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.
கடந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக ராஜபக்ச குடும்பம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது, லஞ்சம், ஊழலை ஒழிக்கும் நோக்கில், ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன் காரணமாக ராஜபக்ச குடும்பம் உட்பட அவர்களுடன் இணைந்து செயற்பட்ட குழுவினர் கடும் அச்ச நிலையில் உள்ளனர்.
ஊழல் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில் அளிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய, நாட்டை விட்டு தப்பிச் சென்ற எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
