பெரியநீலாவணையில் புதிய மதுபான சாலை : மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்! புதிய ஜனாதிபதி அவர்களே இது உங்கள் கவனத்துக்கு.
பெரிய நீலாவணையில் புதிய மதுபான சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இன்று குறித்த மதுபான சாலைக்கு முன்பாக பெருமளவான மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டதை அறிந்து ஆர்ப்பாட்டம் செய்து மகஜரும் கையளித்திருந்தனர்.
பெரிய நீலாவணையில் இது இரண்டாவது மதுபானசாலையாகும்.









