புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று இன்று ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு ஆசி வேண்டி தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் பூசை வழிபாடு கல்முனை ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்றது.
புதிய ஜனாதிபதி அநுரகுமார குமார தலைமையில் மக்களுக்கான ஆட்சி சிறப்பாக இடம் பெற ஆசி வேண்டி இடம் பெற்ற இவ் வழிபாட்டில் கட்சி செயற்பாட்டாளர்கள், தலைவர் தேசிய சமாதான அபிவிருத்தி மையத்தின் தலைவர் வி. ரி. சம்மந்தர் மற்றும் ஆலயங்களின் நிருவாககத்தினர், புத்திஜீவிகள், ஆதரவாளர்கள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.
பூசை வழிபாடுகள் சிவஸ்ரீ ச. கு. ரேவதீசன் குருக்கள் தலைமையில் இடம் பெற்றது.












