2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 75 – 80 வீதமும், கம்பஹாவில் 80 வீதமும், குருநாகலில் 70 வீதமும், களுத்துறையில் 75 வீதமும், நுவரெலியாவில் 80 வீதமும், ஹம்பாந்தோட்டையில் 78 வீதமும், இரத்தினபுரியில் 75 வீதமும், மன்னாரில் 72 வீதமும், காலியில் 74 வீதமும் மற்றும் மாத்தறையில் 64 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

மேலும், பதுளை மாவட்டத்தில் 73 வீதமும், மொனராகலையில் 77 வீதமும், அம்பாறையில் 70 வீதமும், புத்தளத்தில் 78 வீதமும், அனுராதபுரத்தில் 75 வீதமும், திருகோணமலையில் 63.9 வீதமும், கேகாலையில் 75 வீதமும், யாழ்ப்பாணத்தில் 49 வீதமும், மாத்தளையில் 68 வீதமும், கண்டியில் 65 வீதமும், முல்லைத்தீவில் 57 வீதமும், வவுனியாவில் 72 வீதமும், பொலன்னறுவையில் 78 வீதமும், மட்டக்களப்பு 69 வீதமும், யாழ்ப்பாணத்தில் 49 வீதம் மற்றும் கிளிநொச்சியில் 68 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.