ஐ.தே.கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும்,கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பேரின்பராசா மனோரஞ்சினியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் பிச்சாரக் கூட்டம் பாண்டிருப்பில் 16.09.2024 அன்று நடைபெற்றது.
பான்டிருப்பில் அமைந்துள்ள ஐ.தே.கட்சியின் தொகுதிக்காரியாலயத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.
பான்டிருப்பு கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும்,கல்முனை பிரதேச கட்சியின் பிரதிநிதிகள் பலரும் இப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஐ.தே.கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் பேரின்பராசா மனோரஞ்சினி கல்முனை தொகுதி கிராமங்கள்தோறும் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்காக தீவிர பிரச்சார முன்னெடுப்புக்களை 18 ஆம் திகதிவரை செய்து வந்தார்.






