பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் நூலக வளாகத்தில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட, நூலக சரஸ்வதி பூங்காவானது சங்கத்தின் தலைவரும் பிரபல எழுத்தாளருமான திரு. உமா வரதராஜன் தலைமையில் இன்று .(2024.09.07) மிகக் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் பிரதம விருந்தினராக கலந்து, குறித்த பூங்காவை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் அமைப்பின் செயலாளரும் சேனைக்குடியிருப்பு மத்திய மருந்தக பொறுப்பாளருமான டாக்டர். திருமதி. புஷ்பலதா லோகநாதன் , அமைப்பின் ஆலோசகரும் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர். திரு. ந.ரமேஸ் , முன்னாள் மாநகர சபை உறுப்பினர் .அ.விஜயரெத்தினம் , முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளருபான .பொன். செல்வநாயகம் , முன்னாள் தினகரன் பத்திரிகை பிரதம ஆசிரியர் .க.குணராசா , அமைப்பின் உப தலைவர் .பா.செ.புவிராசா , பாடசாலை அதிபர்கள், ஆலய பரிபாலன சபையினர், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், அறநெறிப் பாடசாலை அதிபர்கள், அமைப்பின் உறுப்பினர்கள், நலன்விரும்பிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
புகைப்பட உதவி – சுகா வீடியோ




























