ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கல்முனையில் துண்டுப்பிரசுரம் பகிர்வு
பாறுக் ஷிஹான்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கல்முனை மா நகரில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் முருகேசு ராஜேஸ்வரன் தலைமையில் குறித்த நடவடிக்கை சனிக்கிழமை(7) இடம்பெற்றது.
இதன் போது நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு சந்திகள், கல்முனை சந்தை நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் முருகேசு ராஜேஸ்வரன் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு பொதுமக்கள் வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை குறித்த நடவடிக்கை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















