கல்முனையில் மு.இராஜேஸ்வரன் ஏற்பாட்டில் ஆலய வழிபாட்டுடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாரக பிரசாரப்பணிகள் ஆரம்பம் – அலுவலகமும் திறந்து வைப்பு!
நடைபெறவுள்ள ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலில் எரிவாயு சிலின்டர் சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரனின் ஏற்பாட்டில் பிரசாரப்பணி ஆரம்பிக்கப்பட்டது.
நற்பிட்டிமுனை அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம் பெற்று தேர்தல் பிரசாரப்பணிமனையும் திறந்து வைக்கப்பட்டடது தொடர்ந்து, மக்கள் சந்திப்பு கூட்டமும் இடம் பெற்றது.
இதில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மஞ்சுள பெர்னாண்டோ உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.






