துரைவந்தியமேடு பாடசாலைக்கு பாடசாலை ரை தேர்ச்சி அறிக்கை நூல் என்பன அன்பளிப்பு – நிதி அனுசரணை உதவும் பொற்கரம் கணபதிப்பிள்ளை விசு
துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகளும் , மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இதற்கு கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளர் உதவும் பொற்கரங்களின் ஸ்தாபகர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் நிதி அனுசரனை செய்திருந்தார். மாணவர்களுக்கு இவைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் R செந்தில் தலமையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு அதிதிகளாக உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் சார்பாக திருமதி .ஜெயந்தி கனகசூரியம் , பாடசாலையின் EPSI இணைப்பாளர் ஜனாப். அப்துல் ஹபில் , மற்றும் ஆசிரிய ஆலோசகர்களான K. சாந்தகுமார், M.லக்குணம்.அவர்களும் மற்றும் பழைய மாணவர்கள், ஆலய தலைவர் , பெற்றோர்கள், நலன்வவிரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
















