பாண்டிருப்பில் எட்டாம் திகதி நூலக சரஸ்வதி பூங்கா திறப்பு விழா!
பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தினால் இயக்கப்பட்டு வரும் பாண்டிருப்பு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதி பூங்கா திறப்பு விழா நிகழ்வு எதிர்வரும் எட்டாம் திகதி காலை 10 மணிக்கு இடம் பெறவுள்ளது.
மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் தலைவரும் பிரபல எழுத்தாளருமான உமா வரதராஜன் தலைமையில் இடம் பெறவுள்ள இந் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த சரஸ்வதி சிலை பூங்காவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாண்டிருப்பின் மிகப்பழைமைவாய்ந்த சனசமூக மறுமலர்ச்சி நிலையம் தொடர்ச்சியாக பாண்டிருப்பில் பல்வேறு ஆக்கபூர்வமான சமூகப்பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
