ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒருமித்து செயற்படுங்கள் – தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேரில் ஆலோசனை!
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் , தமிழ்த் தேசிய
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (29) சந்திப்பு இடம் பெற்றது.
இச் சந்திப்பின்போது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல்புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
அஜித் டோவல், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல்
கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும்என்பது குறித்து தான்எதனையும் கூறப்போவதில்லை எனவும், இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ்மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம் பெற்ற இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வ
தற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்சார்பில் அதன் தலைவரும் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும், ரெலோவின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.அதன்படி சந்திப்பில் சிறீதரன்,சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்த போதிலும்,வெளிநாட்டுப் பயணமொன்றுக்குச்
செல்ல வேண்டியிருந்ததன் காரணமாக, சந்திப்பின் தொடக்கத்திலேயே
சிறிதரன் வெளியேறினார்.
இச் சந்திப்பில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்வுகள் உட்பட பல விடயங்கள் பேசப்பட்டன