தொடர்ச்சியாக கல்விக்கு கரம் கொடுத்து வரும் சீடாஸ் கனடா

தாயகத்தில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் செயற்பாடுகளை கனடாவை தளமாகக்கொண்டு இயங்கி வரும் “சீடாஸ் கனடா’ அமைப்பு முன்னெடுத்து வருகிறது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்உள்ள பின் தங்கிய கிராமங்களையும், மாணவர்களின் கல்வித் தேவைகளையும் இனம் கண்டு கல்வி முன்னேற்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.

மட்டக்களப்பு இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு சீடாஸ் அமைப்பின் அனுசரணையுடன் இலவச மேலதிக வகுப்புக்கள் இடம் பெறுகிறது. அந்த வகையில் மாணவர்கள் பெற்றோர்களுக்கான உள வலுவூட்டும் செயற்பாட்டு அமர்வு இடம்பெற்றது.

மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் தரம் 10 கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்றிட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் மாத இறுதியில் மாணவர் பெற்றோர்களுக்கான உள வலுவூட்டல் செயற்பாடு நேற்று 24.08.2024 சனிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

மேலதிக வகுப்புகள் தொடர்பான முன்னேற்றம் மற்றும் சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன. அத்துடன் அலகுப் பரீட்சையில் மாணவர் பெற்ற புள்ளிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் , அவை தொடர்பாக உரிய ஆலோசனைகளும் அளிக்கப்பட்டன. இம்மேலதிக வகுப்புகள் தம் பிள்ளைகளது கற்றலை மேம்படுத்த உதவுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.


இச்செயற்பாடுகளில் வித்தியாலய அதிபர் .எஸ்.கிரிசாந்தன், இச்செயற்றிட்டத்தின் வளவாளர்களும், மற்றும் சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பின் அங்கத்தவர்களான .முத்துராஜா புவிராஜா, சுப்பிரமணியம் கணேஷ், .கந்தையா ரவிச்சந்திரன், கணபதிப்பிள்ளை லிங்கராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.