ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுப்பது என இன்று வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்தக் கூட்டம்
இன்று நடைபெற்றது.


தென்னிலங்கையின் பிரதான கட்சிகளோடு நடைபெறும் பேச்சுக்களின் விவரங்களைச் சுமந்திரன் எம்.பி. இன்றைய கூட்டத்தில் தெளிவுபடுத்தினார்.


தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுக்கும்படியும், சம்பந்தப்பட்ட வேட்பா
ளர்களின் கருத்து நிலைகளை அறிந்து,அவர்களின் தேர்தல் அறிக்கைகள்
வெளியான பின்னர் மத்திய குழு மீண்டும்கூடி அவற்றை ஆராய்ந்து, ஜனாதிபதித்
தேர்தல் தொடர்பான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் இன்றைய கூட்டத்தில்
தீர்மானிக்கப்பட்டது.

You missed