அரியநேந்திரனை வெறுக்கவில்லை பொது வேட்பாளர் அரியநேந்திரனை வெறுக்கிறோம்!

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பொது வேட்பாளர் விடயமும் பேசப்படுவதுடன். இதற்கு பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தன. பொது வேட்பாளர் விடயம் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றது ,அது தமிழ் மக்களுக்கு பாதகத்தையே தரும் எனும் கருத்தை நியாயப்படுத்தி பல தரப்பாலும் பொது வெளியில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன, தற்போதும் முன்வைக்கப்படுகின்றன.

பொது வேட்பாளர் அவசியம் எனும் விடயத்தையும் ,அதற்கான காரணங்கள் குறிபிட்டு இதற்கு ஆதரவான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஆர்வத்தை அவதானிக்கின்றபோது பொது வேட்பாளர் விடயத்திற்கு பெரிதாக வரவேற்பு இல்லாத நிலையே காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் நன்கு அறியப்பட்ட தமிழ்த் தேசிய கொள்கையுடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அவரின் இந்த முடிவை அரியநேந்திரனின் ஆதரவாளர்கள் உட்பட பலர் விமர்சித்து வருவதை பரவலாக சமூக ஊடகங்களில் அவதானிக்க முடிகிறது.

அரியநேந்திரனை வெறுக்கவில்லை பொது வேட்பாளர் அரியநேந்திரனை வெறுக்கிறோம் என அவருடன் நெருங்கியவர்களே கூறிவருகின்றனர்.

You missed