பு.கஜிந்தன்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்  வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீன அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு சுமார் ஆயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா பெறுமதியான வலைகள் அன்பளிப்பு செய்யப்பட்ட நிலையில் அதனை மீனவர்களுக்கு  கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக வடக்கு கிழக்கு சார்ந்து வட்கக்ல் நான்கு மாவட்டங்களும் கிழக்கில் மூன்றுமாக ஏழு கடற்தொழில் மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கெள்ளவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

 ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சீன தூதுவரின் விஜயத்திற்காக ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

You missed