ரணிலின் சின்னம் எரிவாயு சிலின்டர் : நாளுக்கு நாள் ரணிலுடன் இணைந்துவரும் எம்.பிக்கள்

நடைபெறவுள்ள ஜனாபதித் தேர்தலில் இம்முறை சுமார் 40 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பிரதான வேட்பாளர்களாக நான்கு பேர் காணப்படுகின்றனர். சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எரி வாயு சின்னம் கிடைத்துள்ளது.

நாளுக்கு நாள் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் பிரமுகர்களும் ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்து வருகின்றனர்.

நேற்யை தினமும் சஜித்துக்கு ஆதரவு வழங்கும் மனோ கணேசனின் கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துகொண்டிருந்தார். பொதுஜன பெரமுன கட்சி சார்பாக நாமல் ராஜபக்ச போட்டியிட்டாலும் அக்கட்சியைச் சேர்ந்த 90 க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுடன் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

You missed