அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித் தருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று நேரில் வலியுறுத்தினார்.
கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை நேற்று முற்பகல் சந்தித்துப் பேசிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதன்பின்னர் முற்பகல் 11.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் நடை முறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள விடயங்களை உள்ளடக்கி அண்மையில்
சுமந்திரனிடம் கையளித்த ஆவணத்தை ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின்
பிரதிநிதிகளுக்கும் வழங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்தார்.
அதேவேளை, அந்த ஆவணத்தில
உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்பட வேண்டிய
சட்டங்கள், நீக்கப்பட வேண்டிய சட்டங்கள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்துரை
யாடினர்.
அதேபோன்று அரசமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதி
காரங்களைத் திருப்பித் தருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி
யளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும்
பறிக்கப்படாதவாறு அரசமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும், எதிர்வரும்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டும் எனவும் இதன்போது சுமந்திரன் எம்.பி.
வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அதனைச் செனட் சபை மூலமாகச் செய்வதாக அல்லவா ஏற்கனவே கலந்துரை யாடினோம் என வினவினார்.
அதனை ஆமோதித்த சுமந்திரன், புதிய அரசமைப்பு தொடர்பில் முன்னர் கலந்துரையாடிய வேளையில், மேற்குறிப் பிட்டவாறு வழங்கிய அதிகாரங்கள்
மீண்டும் பறிக்கப்படாமல் பாதுகாப்பதற்குச் செனட் சபையை நிறுவுவது குறித்துத்
தாம் பேசியதாகவும், இருப்பினும் அது குறித்து பகிரங்கமாகத் தெரியக்கூடிய
வகையில் ஜனாதிபதி உத்தரவாதத்தை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்
கொண்டார்.
மேலும், தேசிய கொள்கைகள் முழு நாட்டுக்கும் பொதுவானவையாக இருப்பி
னும், அதன்கீழ் உரிய கட்டமைப்புக்களை நிர்வகிப்பதற்கான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், விசேட சட்டங்களுக்கான தேவைப்பாடுகள் உள்ள போதிலும், அவை தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படாத வண்ணம் அவற்றை மாற்றியமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தினார்.
அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இது பற்றியும் சுமந்திரனுடன் விரிவாகக்
கலந்துரையாடினார