அம்பாறை மாவட்ட விபுலாநந்தர் புனர்வாழ்வு அமைப்பின் பங்களிப்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

அம்பாறை மாவட்ட விபுலாநந்தர் புனர் வாழ்வு அமைப்பினால்(பிரித்தானியா, சிறிலங்கா) ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண் வைத்திய சிகிச்சை முகாம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

இதில் 70க்கு மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டு 36 பேருக்கு கண்புரைக்கான சிகிச்சை கண் வைத்திய நிபுணர் நா. நிரோஷன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

வறுமை கோட்டுக்கு கீழ் வாழுகின்ற மக்களுக்கான பல் வேறுபட்ட சேவைகளை இவ்வமைப்பு 20 வருடங்களுக்கு மேலாக அம்பாறை மாவட்டத்தில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

You missed