தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்க பா.அரியநேத்திரனை நியமிப்பதற்குப் பேச்சாளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும், இதன் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்
ளது.

பொது வேட்பாளர் விடயம் தமிழ் மக்களுக்கு பாதிப்பாக அமையும் ஆகவே பொது கட்டமைப்பு இந்த விடயத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதே வேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனை பொது வேட்பாளராக போட்டியிட வேண்டாம் எனவும் இது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும் அரியநேந்திரனின் ஆதரவாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளும், சிவில் சமூகமும் இணைந்து உருவாக்கிய தமிழர் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான பேச்சுகள் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.


இதன் தொடராக ஜனாதிபதி வேட்பாளராக ஒருவரைத் தேர்வு செய்வதில் இழுபறிகள் இருந்து வந்த நிலையில் தற்போது ஒருவர் தெரிவு செய்யப்பட்டு இன்று உத்தியோக
பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.


அதாவது தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தில் பல கட்சிகள் இணங்கியிருந்தாலும் குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது முடிவை அறிவிக்காத நிலையில் அதே கட்சியைச் சேர்ந்த அரியநேத்திரன் தற்போது நியமிக் கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.