ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்க விருப்பமில்லை என்று தம்மிக்க பெரேரா, அக்கட்சியின் பொதுச்செயலாளருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.


இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ரணில் விக்கரமசிங்க பக்கம் பல அரசியல்வாதிகள் தமது ஆதரவை அறிவித்து வருகின்றனர்.