( வி.ரி. சகாதேவராஜா)

தாய் குழந்தை நேய மருத்துவமனைகளை உருவாக்க மற்றும் மேம்படுத்து
வதற்கான பயிற்சி நிகழ்வு சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணி
யகத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் நடைபெற்றது .


இந் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.


இந்த நிகழ்வுக்கு டாக்டர். கே கிரிசுதன், தாய், சேய் நல வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள், அத்தியட்சகர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள்கலந்து கொண்டனர்.


இதன் வளவாளராகக் கருத்துரைத்த பேராசிரியர் எம். திருக்குமார் கருத்தரித்து முதல் தடவையாக சிகிச்சை நிலையத்துக்கு வரும் போதே அவர்களுடன் நடந்துகொள்ள வேண்டிய முறை தொடர்பிலும் தாய் குழந்தை நேய வைத்தியசாலைகளில் தொடர்பாடலின் அவசியம் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.