எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடக் கூட்டம் இன்று (04) காலை கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகமான தாருசலாமில் நடைபெற்றுள்ளது.