தமிழர்களுக்கு காணி, காவல்துறை அதிகாரம் வழங்க விடமாட்டோம். நாமல் திட்டவட்டம்

சிறிலங்கா அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பை வெளியிடுவதாக நாமல் ராஜபக்ச
தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் இன்று(31/07/2024) கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த விடயத்தை தெற்கைப் போன்றே வடக்கிலும் சென்று கூறி வருகிறேன். சில தரப்பினரைப் போன்று வடக்கில் ஒன்றையும் தெற்கில் ஒன்றையும் நாங்கள் பேசப் போவதில்லை.

காணி பொலிஷ் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கவும் மாட்டோம் அதனை வழங்குவதாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கவும் மாட்டோம் எனவும் மேலும் கூறினார்.