கனடாவில் விமான பயணம் ஒன்றின் போது தமிழ் குடும்பம் ஒன்றுக்கு நெருக்கடி ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தியாவை சேர்ந்த குமணன் – கல்பனா தம்பதி ரொரன்றோவிலிருந்து வான்கூவருக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தில் டிக்கெட் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் விமானத்தில் பயணிப்பதாக செல்லும்போது, அவர்கள் கையில் வைத்திருந்த அனுமதிக்கப்பட்ட அளவிலான பைகளுடன் அவர்கள் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தங்களுக்குத் தேவையான மருந்துகளும் விலையுயர்ந்த நகைகளும் அதில் இருப்பதாக குறித்த தம்பதி தெரிவித்துள்ளனர். எனினும் அதற்கு விமான பணியாளர் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் மற்றுமொரு விமான நிறுவனத்தில் 1,927 டொலர்கள் செலுத்தி விமான டிக்கெட் பெற்றுள்ளனர்.
இதன் காரணமாக கடும் கோபம் அடைந்த தமிழ் தம்பதி, விமான நிறுவனத்துக்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றை எழுதியதுடன், டிக்கெட்டுக்கான தங்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு கோரியுள்ளார்.
இந்நிலையில் குமணன் தம்பதி, தங்கள் விமான நிறுவன விமானத்தில் பயணிக்க தடையேதும் விதிக்கப்படவில்லை என்று, வெஸ்ட்ஜெட் விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் ஜூலியா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்கள் டிக்கெட்டுக்காக செலுத்திய 800 டொலர்கள் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.