புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் 60 ஆயிரம் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானிய அரசு அனுமதிக்கவுள்ளதாக அறிக்கை
யொன்று வெளியாகியுள்ளது.


பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் எடுத்த முதல் முடிவானது, முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ருவாண்டா நாடு கடத்தல் திட்டத்தை கைவிடுவதாகும்.


முன்னாள் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் இயற்றிய இத்திட்டத்தின் கீழ், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவார்கள்,அங்கு அவர்களது புகலிடக் கோரிக்கைகள் செயல்படுத்
தப்படும்.
கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்றதன் பின்னர் இந்த திட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து தொழிற்கட்சி அரசாங்கம் சுமார் 90 ஆயிரம் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் புகலிட
விண்ணப்பங்களை விரைவாகக் கண்காணிக்கத் தயாராக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இவற்றில் சுமார் 60 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.ரிஷி சுனக்கின் பிரதமர் பதவியின் முடிவில் ருவாண்டா
திட்டம் ஒரு பாரிய பிரச்சினையாக மாறியது. எனவே தற்போது, புதிய தொழிற்கட்சி அரசாங்கம் இதற்கு ஒரு தீர்வாக இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.